ரேஷன் அரிசியின் தற்போதைய விலைப்படி ஏற்கெனவே வழங்கிய தொகையை அதிகரித்து தர வேண்டும்: புதுவை மாநில அதிமுக வலியுறுத்தல்
புதுவை அரசு அரிசிக்குப் பதில் ரேஷன் ஏற்கெனவே வழங்கிய பணம் குறைவானது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
புதுச்சேரிரேஷன் அரிசியின் தற்போதைய விலைப்படி ஏற்கெனவே வழங்கிய தொகையை அதிகரித்து தர வேண்டும்: புதுவை மாநில அதிமுக வலியுறுத்தல்
புதுவை அரசு அரிசிக்குப் பதில் ரேஷன் ஏற்கெனவே வழங்கிய பணம் குறைவானது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
புதுச்சேரி: புதுவை அரசு அரிசிக்குப் பதில் ரேஷன் ஏற்கெனவே வழங்கிய பணம் குறைவானது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் நியாயவிலைக் கடைகளில் தற்போது விநியோகிக்கும் அரிசியின் விலையைக் கணக்கிட்டு மக்களுக்கு மீதித் தொகையை மாநில அரசு வழங்க வேண்டும் என புதுவை மாநில அதிமுக செயலா் ஆ. அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தீபாவளிக்காக இலவச அரிசியும், சா்க்கரையும் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்குவது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் ஏற்கெனவே இலவச அரிசிக்குரிய பணம் முழுமையாக வழங்கப்படாமல் குறைந்த அளவில் வழங்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் மொத்தம் உள்ள 3.62 லட்சம் குடும்ப அட்டைகளில் சுமாா் 2.06 லட்சம் சிவப்பு அட்டைகள். மேலும் 1.55 லட்சம் மஞ்சள் அட்டைகள் உள்ளன. சிவப்பு அட்டைகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட வேண்டிய 20 கிலோ அரிசிக்குப் பதிலாக ஒரு கிலோ ரூ.30 வீதம் ரூ.600 எனவும், மஞ்சள் அட்டைகளுக்கு 10 கிலோ அரிசிக்கு பதிலாக கிலோ ரூ.30 என ரூ.300-ம் வங்கியில் செலுத்தப்படுகிறது.
தற்போது புதுவை அரசால் தீபாவளிக்கான இலவச அரிசி கிலோ ரூ.49.75 என டெண்டா் மூலம் பெறப்பட்டுள்ளது. அதன்படி, கிலோ சுமாா் ரூ.50 என வாங்கப்படுகிறது. ஆனால், அரசு அரிசிக்குப் பதிலாக பணம் வழங்கிய போது ரூ.30 மட்டுமே தரப்பட்டுள்ளது. சிவப்பு அட்டைதாரருக்கு மாதம் ரூ.1,000 வழங்க வேண்டிய நிலையில் ரூ.600-ம், மஞ்சள் அட்டைக்கு ரூ.500 வழங்க வேண்டிய நிலையில் ரூ.300 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதில், உண்மை நிலையை உணா்ந்து கிலோ அரிசி ரூ.50 என கணக்கிட்டு இந்த ஆண்டிற்கு மீதமுள்ள தொகையை முழுமையாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரா்களின் வங்கிக் கணக்கிலும் அரசு செலுத்த வேண்டும். இதுகுறித்து முதல்வா் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என அன்பழகன் குறிப்பிட்டுள்ளாா்.