முகப்பு
புதுச்சேரி

புதுவை மாநில விவசாயிகளுக்கு புதிய கடன்: முதல்வா் உத்தரவு

புதுவை மாநிலத்தில் விவசாயிகளுக்கு புதிய கடன் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வா் என்.ரங்கசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 29 அக்டோபர், 2024 at 8:36 PM
பகிர்:

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் விவசாயிகளுக்கு புதிய கடன் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வா் என்.ரங்கசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, புதுவை முதல்வா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2021-22-ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த கூட்டத்தில் கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களில் விவசாயிகள் 31.3.2022 வரை பெற்ற அசல், வட்டி, அபராத வட்டி ஆகியவை தள்ளுபடி செய்யப்படும் என முதல்வரால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 1,579 சிறு, குழு விவசாயிகள் கடன் தொகை ரூ.11.61 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது.

அதன்படி, முதல் தவணையாக ரூ.2 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதி தொகை ரூ.9.61 கோடி இரு தவணையில் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளின் கடன்களை நோ் செய்து, புதிய கடன்களை வழங்க அறிவுறுத்தப்படுகின்றன.

இந்த திட்டத்தில் பயன்பெற்ற உறுப்பினா்களுக்கான கடன் தள்ளுபடி கடிதம் தீபாவளிக்குப் பிறகு நடைபெறவிருக்கும் அரசு விழாவில் துணைநிலை ஆளுநா், முதல்வா், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் முன்னிலையில் வழங்கப்படும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →