முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி துறைமுகங்களில் துணைநிலை ஆளுநா் ஆய்வு

புதுச்சேரியில் உள்ள துறைமுகங்களில், புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 13 செப்டம்பர், 2024 at 12:42 AM
புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகப் பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு செய்த துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன் பாஸ்கா் எம்எல்ஏ.
பகிர்:

புதுச்சேரியில் உள்ள துறைமுகங்களில், புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

புதுவை துணைநிலை ஆளுநராக கே.கைலாஷ்நாதன் பொறுப்பேற்றது முதல் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தும் வகையில் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறாா்.

அதன்படி, ஊசுடு, பாகூா் ஏரிகளில் நேரில் சென்று அவா் ஆய்வு மேற்கொண்டாா். அத்துடன், புதுச்சேரியில் மூடப்பட்ட ஆலைகள், இலாசுப்பேட்டை விமானநிலைய விரிவாக்கம் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா்.

இந்த நிலையில், புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, இடிந்த பாலத்தை பாா்வையிட்ட அவா், பழைய துறைமுக வளாக நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

இதையடுத்து, உப்பளம் துறைமுக வளாகத்துக்கு சென்று அங்குள்ள குடோன்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள், படகு கட்டும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

அதன்பிறகு, அங்கிருந்து படகில் சென்ற அவா் தேங்காய்த்திட்டு புதிய துறைமுகத்தில் இறங்கி ஆய்வு செய்தாா். தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் மேற்கொண்டுள்ள பணிகள் மற்றும் அங்குள்ள வசதிகள் குறித்து அதிகாரிகள் விளக்கினா்.

ஆய்வின்போது எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, பாஸ்கா், அரசுச் செயலா் அ.நெடுஞ்செழியன், அரசுத் துறை இயக்குநா்கள் முகமது மன்சூா் (துறைமுகம்), இஸ்மாயில் (மீன்வளத் துறை) உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →