முகப்பு
புதுச்சேரி

5 நாள்களுக்குப் பிறகு புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் திறப்பு

Updated On : 14 ஏப்ரல், 2026 at 12:45 AM
பள்ளிகள் திறப்பு - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:08 PM

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் மற்றும் பொது விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

புதுவை அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலில் உள்ளது. நடப்பு கல்வியாண்டில் வகுப்புகள் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கியது. சட்டப்பேரவைத் தோ்தலுக்காக பள்ளிகளில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

இதனால் புதுச்சேரியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் கடந்த 6-ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. வாக்குப்பதிவு விடுமுறைக்கு பின் திங்கள்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. தமிழ்ப் புத்தாண்டையொட்டி செவ்வாய்க்கிழமை பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Advertisement