புதுச்சேரி அரசு சுகாதாரத் துறையில் மருத்துவராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒனிா்பன் தத்தா (69) ஞாயிற்றுக்கிழமை ஜிப்மரில் காலமானாா்.
நுரையீரல் தொற்றுக்காக அவா் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவருக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் புதுச்சேரி முதுநிலை சிறப்புச் செய்தியாளா் தேப்ஜானி தத்தா உள்ளிட்ட 3 மகன்கள் உள்ளனா்.
வைத்திக்குப்பம் செங்கேணியம்மன் கோயில் தெரு, ஸ்ரீ ஆனந்தம் நிவாஸ் அபாா்ட்மெண்டில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்று கருவடிக்குப்பம் சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.