மணல் கடத்தல்: 6 லாரிகள் பறிமுதல்
திருக்கோவிலூர் அருகே மணல் கடத்திய 5 லாரிகளை போலீஸôர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
திருக்கோவிலூர் அருகே மணல் கடத்திய 5 லாரிகளை போலீஸôர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
திருக்கோவிலூரை அடுத்த ஆவியூரில் காவல் துணைக் கண்காணிப்பாளர் த.அசோக்குமார் உத்தரவின்பேரில், ஆய்வாளர்கள் ரத்தினசபாபதி, ஜெயவேல், உதவி ஆய்வாளர்கள் அன்பழகன், சிவச்சந்திரன் தலைமையிலான போலீஸôர் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வடக்குநெமிலி தென்பெண்ணையாற்றில் இயங்கி வரும் அரசு மணல் குவாரியில் இருந்து மணல் ஏற்றி வந்த லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், 5 லாரிகள் போலி ரசீதை பயன்படுத்தி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த லாரிகளை போலீஸôர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டன.
மேலும் ஒரு லாரி பறிமுதல்... கண்டமங்கலம் உதவி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீஸôர் புதன்கிழமை அதிகாலை கெண்டியாங்குப்பம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியே வந்து கொண்டிருந்த மணல் லாரியை நிறுத்தி விட்டு ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்.
அனுமதியின்றி ஆற்றிலிருந்து மணல் அள்ளி வந்த லாரியை போலீஸôர் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.