தமிழ்ப் படைப்பாளர்கள் சங்க விழா
சங்கராபுரத்தில் தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் சார்பில் நாற்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்கராபுரத்தில் தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் சார்பில் நாற்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாமேதை லெனின், அண்ணல் அம்பேத்கர், பாவேந்தர் பாரதிதாசன், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஆகியோரது பிறந்த நாள்கள் நாற்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டன.
விழாவுக்கு, பூட்டை சிந்தாமணி சமூகக் கல்வி அறக்கட்டளை நிறுவனர் தொ.சண்முகம் தலைமை வகித்தார். வள்ளலார் மன்ற செயலர் இரா.நாராயணன், அரிமா மாவட்டத் தலைவர் கே.ஜனார்த்தனன்சிங், புலவர் மு.ஜெயக்குமாரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.சங்கச் செயலர் அ.இராமசாமி வரவேற்றார்.
சைவ சித்தாந்த பேராசிரியர் ச.ஜம்புலிங்கம் குறள் விளக்கம் அளித்தார். திருக்கோவலூர் தமிழ்ச் சங்கத் தலைவர் சிங்கார.
உதியன் தொடக்கவுரை ஆற்றினார். சங்கத் தலைவர் அரங்க. செம்பியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.துரைமுருகன் பயிற்சிக் களத்தில் சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
வழக்குரைஞர் ந.தமிழ்க்குமரன், முனைவர் தெ.சாந்தகுமார், கவிஞர்கள் க.முருகேசன், நா.தனவேல், இயற்கை வேளாண் ஆலோசகர் ச.சதீஷ்குமார் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
சாதுகற்கண்டு சிவஞானஅடிகள், ஓவியர் மு.கலைச்செழியன், நல்லாசிரியர்கள் மு.முகமதுஉசேன், கோ.செல்வராஜன், சங்கை தமிழ்ச் சங்கத் தலைவர் ம.சுப்பராயன், அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத் தலைவர் வெ.சௌந்தரராஜன், தலைமை ஆசிரியர் ஆ.இலட்சுமிபதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
ஆசிரியர் ச.சாதிக்பாட்ஷா, மூவேந்தர் முத்தமிழ் கழகத் தலைவர் டி.எம்.சுப்பிரமணியன், கூட்டுறவு சங்கத் தலைவர் கோ.குசேலன் உள்பட பலர் கலந்துகொண்டனர். சங்க துணைத் தலைவர் சி.இளையாப்பிள்ளை நன்றி கூறினார்.