விழுப்புரம் புத்தகத் திருவிழாவில் நூல் வெளியீடு
விழுப்புரத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் கோ.செங்குட்டுவனின் "அருங்காட்சியகம்- அவசியமும், அவசரமும்' என்ற நூல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
விழுப்புரத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் கோ.செங்குட்டுவனின் "அருங்காட்சியகம்- அவசியமும், அவசரமும்' என்ற நூல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
விழுப்புரம், கே.கே. சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சென்னையைச் சேர்ந்த இல்லம் தோறும் நூலக இயக்கம், விழுப்புரம் முல்லை புத்தக அங்காடி ஆகியவை சார்பில் புத்தகத் திருவிழா கடந்த 6-ஆம் தேதி தொடங்கி வரும்
15-ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
இதில் நாள்தோறும் தமிழ் அறிஞர்கள், நூலாசிரியர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள், நூல் வெளியீடு போன்றவை நடைபெற்று வருகின்றன.
ஞாயிற்றுக்கிழமை எழுத்தாளர் கோ.செங்குட்டுவனின் "அருங்காட்சியகம்- அவசியமும், அவசரமும்' நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழுப்புரம் பாரதி சிந்தனைப் புலம் ராமமூர்த்தி தலைமை வகித்தார். கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன், அச்சகத்தார் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முல்லை புத்தக அங்காடி ஏழுமலை வரவேற்றார்.
நூலை புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் நா.இளங்கோ வெளியிட புதுச்சேரி மாநில காவல் கண்காணிப்பாளர் வீர.பாலகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். நூலாசிரியர் கோ.செங்குட்டுவன் ஏற்புரையாற்றினார். இல்லந்தோறும் நூலக இயக்க தலைவர் ந.ராசாராம் நன்றி கூறினார்.