விழுப்புரம்

விருது வழங்கும் விழா

தியாகதுருகம் ஒளவையார் தமிழ்ச் சங்கம் சார்பில் பாவரங்கம், விருது வழங்கும் விழா கள்ளக்குறிச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. 

DIN

தியாகதுருகம் ஒளவையார் தமிழ்ச் சங்கம் சார்பில் பாவரங்கம், விருது வழங்கும் விழா கள்ளக்குறிச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு சங்கத் தலைவர் கல்யாணி நடராஜன் தலைமை வகித்தார். விழுப்புரம் பாவேந்தர் பேரவை செயலர் உலகத்துரை, மணலூர்பேட்டை தமிழ்ச் சங்கத் தலைவர் தா.சம்பத், கே.சுமேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார். அருணா குமாரி  வரவேற்றார். 
நகைக்கடை மேலாளர் சுமேஷ், அரங்க வேல்முருகன், முன்னாள் எம்எல்ஏ கோமுகி மணியன் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கி பேசினர்.  விழுப்புரம் தியாகி அறக்கட்டளை தலைவர் கோ.விஜயகுமார், ஒளவையார் விருதை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் இரா.வண்ணமுகிலுக்கு வழங்கிப் பேசினார்.  பாவலர் மலரடியான் தலைமையில், இலக்கிய வானில் இனியவை' என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் கவிஞர்கள் வீ.கோவிந்தராஜன், கவிதைத்தம்பி, கி.ச.தமிழரசி, வளர்மதி செல்வி, மு.பன்னீர்செல்வம், கோ.பாரதி, ஜெ.அருள்ராஜ் ஆகியோர் கவிதை வாசித்தனர். கோ.ரஞ்சித்குமார் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT