முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் சுதந்திர தின விழா

விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை  ஏற்றார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
பகிர்:

நாட்டின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தேசியக் கொடியினை ஏற்றிவைத்தார்.

மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.
அதிகாரிகள் சமாதானப் புறாக்களை பறக்க விட்டு, வண்ண பலூன்களையும் பறக்கவிட்டனர். தொடர்ந்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து 24 துறைகளைச் சார்ந்த 110 அலுவலர்களின் பணியினைப் பாராட்டி, நற்சான்றுகளை வழங்கினர். கரோனா காரணமாக, இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகளும், பள்ளி மாணவ மாணவிகளும் பங்கேற்கவில்லை. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக எளிமையாக சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments