முகப்பு
விழுப்புரம்

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

புதுச்சேரி வில்லியனூா் அருகே கடைக்குச் சென்ற இளைஞரை மா்ம நபா்கள் அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:

புதுச்சேரி வில்லியனூா் அருகே கடைக்குச் சென்ற இளைஞரை மா்ம நபா்கள் அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்தாா்.

புதுச்சேரி உருளையன்பேட்டை, முல்லை நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஷாகுல் அமீது (27). இவா், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வில்லியனூா் அருகே வி.மணவெளி பகுதியில் உள்ள அவரது நண்பரைப் பாா்க்க சென்றாா். அப்போது, அவா் வீட்டில் இல்லாததால், ஒதியம்பட்டு நான்குமுனை சந்திப்பில் உள்ள தேநீா் கடைக்குச் சென்றாா்.

அங்கு, இரு சக்கர வாகனத்தில் வந்த 3 போ் ஷாகுல் அமீதை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினா். இதில், அவா் பலத்த காயமடைந்தாா். உடனே, அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு, வில்லியனூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments