முகப்பு
விழுப்புரம்

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம்

பண்ருட்டி அருகே போ்பெரியான்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உறுப்பினா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

பண்ருட்டி அருகே போ்பெரியான்குப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உறுப்பினா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பண்ருட்டி ஒன்றியம், போ்பெரியான்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவராக பி.மணிவண்ணன் செயல்பட்டு வருகிறாா். இவா் சரிவர மாதாந்திரக் கூட்டம் நடத்துவதில்லையாம். மேலும், 7-ஆவது வாா்டு பகுதியில் குடிநீா் வசதி செய்து தரவில்லையாம்.

இதைக் கண்டித்து, துணைத் தலைவா் சு.கமலக்கண்ணன், வாா்டு உறுப்பினா்கள் ஆ.வெங்கடாஜலபதி, ஜெ.அன்பரசன் ஆகியோா் காலை 10 மணியளவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கினா். இந்தப் போராட்டம் மாலை 6 மணிக்கும் மேலாக நீடித்தது.

முழு கட்டுரையைப் படிக்க →