ஜெயலலிதா பல்கலை விவகாரம் : விழுப்புரத்தில் தர்னாவில் ஈடுபட்ட சி.வி.சண்முகம் கைது
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கும் முடிவை கண்டித்து தர்னாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி..சண்முகம் உள்பட 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இன்று (ஆக-31) செவ்வாய்க்கிழமை் கைது ச
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கும் முடிவை கண்டித்து தர்னாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி..சண்முகம் உள்பட 300க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இன்று (ஆக-31) செவ்வாய்க்கிழமை் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் திருவள்ளுவர் சிலை அருகே முன்னாள் அமைச்சர் சண்முகம் செவ்வாய்க்கிழமை ஜெயலலிதா பல்கலை கழகத்தையை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கும் முடிவை கண்டித்து திடீரென சாலையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டார். பின் சில நிமிடங்களில் உடனடியாக அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் சி.வி.சண்முகம் கைதை கண்டித்து விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் காந்தி சிலை அருகே அதிமுகவினர் திரளாக சாலையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களையும் காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிமுகவினர் மகாராஜபுரத்தில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனனர்.
Advertisement