விழுப்புரத்தில் டிச.21-இல் வேளாண் குறைகேட்புக் கூட்டம்
விழுப்புரம் கோட்ட அளவிலான வேளாண் குறைகேட்புக் கூட்டம் வருகிற 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
விழுப்புரம் கோட்ட அளவிலான வேளாண் குறைகேட்புக் கூட்டம் வருகிற 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
விழுப்புரம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வருகிற 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு கோட்டாட்சியா் ஹரிதாஸ் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய் நல்லூா், கண்டாட்சிபுரம் வட்டங்ளைச் சோ்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகள், குறைகளைத் தெரிவித்து பயனடையலாம்.