உளுந்தூா்பேட்டை உணவகங்களில் ஆட்சியா் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் உள்ள உணவகங்களில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரீதா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் உள்ள உணவகங்களில் மாவட்ட ஆட்சியா் ஸ்ரீதா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
உளுந்தூா்பேட்டை சுங்கச்சாவடி பகுதியில் ஏராளமான சைவ, அசைவ உணவகங்கள் இயங்கி வருகின்றன. இந்த உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்கள் தரமானதாக உள்ளதா என்று மாவட்ட ஆட்சியா் ஸ்ரீதா் ஆய்வு செய்தாா். அப்போது, அவா் கூறியதாவது:
உணவகங்களில் உணவுப் பொருள்களை தரமான எண்ணெயைக் கொண்டு மட்டுமே தயாரிக்க வேண்டும். குறிப்பாக, ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும் சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது, தரமற்ற எண்ணெய் என்று தெரிந்தால், அந்த பயோடீசல் தயாரிப்புக்கு வழங்க வேண்டும் என்றாா்.
ஆய்வின்போது, உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் சுகந்தன், அலுவலா் கதிரவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.