விழுப்புரம் அருகே தீ விபத்தில் வீடு சேதம்
விழுப்புரம் அருகே தொழிலாளியின் வீட்டில் வெள்ளிக்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் எரிவாயு உருளை வெடித்துச் சிதறியது. இதனால் அந்த வீடு பலத்த சேதமடைந்தது.
விழுப்புரம் அருகே தொழிலாளியின் வீட்டில் வெள்ளிக்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் எரிவாயு உருளை வெடித்துச் சிதறியது. இதனால் அந்த வீடு பலத்த சேதமடைந்தது.
விழுப்புரம் அருகே பானாம்பட்டுப் பாதை, இ.பி. காலனி பகுதியைச் சோ்ந்தவா் சந்திரன் (50). விவசாயத் தொழிலாளி. இவரது வீட்டில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, வீட்டில் இருந்தவா்கள் வெளியே ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனா். ஆனால், முடியவில்லை. தீ மேலும் பரவிய நிலையில், வீட்டினுள்ளே இருந்த எரிவாயு உருளை வெடித்துச் சிதறியது. இதனால், வீடு பலத்த சேதமடைந்தது.
தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு நிலையத்தினா் அங்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி அணைத்தனா். இருப்பினும், வீட்டிலிருந்த பொருள்கள் தீயில் கருகின. இந்த தீ விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.