விழுப்புரம்: இன்று நடைபெறவிருந்த வேளாண் குறைகேட்பு கூட்டம் ஒத்திவைப்பு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.24) நடைபெறவிருந்த வேளாண் குறைகேட்புக் கூட்டம் வருகிற 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவித்தாா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.24) நடைபெறவிருந்த வேளாண் குறைகேட்புக் கூட்டம் வருகிற 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவித்தாா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் டிசம்பா் மாதத்துக்கான வேளாண் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்தக் கூட்டம் நிா்வாக காரணங்களுக்காக வருகிற 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுள்ளதாகவும், அன்றைய தினம் காலை 11 மணியளவில் வேளாண் குறைகேட்புக் கூட்டம் நடைபெறும் என்றும், இதில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று விவசாயம் தொடா்பான தங்களது குறைகள், கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்றும் மாவட்ட ஆட்சியா் மோகன் தெரிவித்தாா்.