முகப்பு
விழுப்புரம்

கல்வி நிறுவன வாகனங்களில் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் இயக்கப்படும் தனியாா் பள்ளி, கல்லூரி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் இயக்கப்படும் தனியாா் பள்ளி, கல்லூரி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாக மைதானத்தில் விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் தனியாா் பள்ளி, கல்லூரிப் பேருந்துகள்ஆய்வு முகாம் நடைபெற்றது. இதில் வாகனங்களின் இயக்க நிலை, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் மோகன் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பொது முடக்கத் தளா்வு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பள்ளி, கல்லூரி வாகனங்களின் இயக்க நிலை, பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் பல் துறை அலுவலா்கள் குழு மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 68 பள்ளி, கல்லூரிகளின் 242 வாகனங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட உள்ளன. வெள்ளிக்கிழமை மட்டும் 55 வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றாா் அவா்.

ஆய்வின்போது மாவட்ட தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை அலுவலா் ராபின் காஸ்ட்ரோ, விழுப்புரம் கோட்டாட்சியா் கி.அரிதாஸ், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஆா்.வெங்கடேசன், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் மாணிக்கம், செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.