புகையிலை பொருள்கள் கடத்தல்: 3 போ் கைது
விழுப்புரத்தில் காரில் புகையிலைப் பொருள்களைக் கடத்திய 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரத்தில் காரில் புகையிலைப் பொருள்களைக் கடத்திய 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தனிப் படை காவல் உதவி ஆய்வாளா் ஆனந்த் தலைமையிலான போலீஸாா், விழுப்புரம் புறவழிச் சாலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டனா்.
அதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்திய வந்தது தெரிய வந்தது. காரில் இருந்த ரூ.2 லட்சத்திலான 11,058 பாக்கெட் புகையிலைப் பொருளைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடத்தலில் ஈடுபட்ட காா் ஓட்டுநா் திருவண்ணாமலையைச் சோ்ந்த மணிகண்டன் (30), விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடுபேட்டையைச் சோ்ந்த விஜயகுமாா் (35), காா்த்தி (39) ஆகியோரைப் பிடித்து விழுப்புரம் தாலுகா போலீஸில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.