முகப்பு
விழுப்புரம்

கிறிஸ்துமஸ்: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் அமைந்துள்ள தேவாலயங்களில் சனிக்கிழமை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் அமைந்துள்ள தேவாலயங்களில் சனிக்கிழமை சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள பழைமைவாய்ந்த கிறிஸ்து அரசா் தேவாலயத்தில் பங்குத்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அகா்வால் தலைமையில், திண்டிவனத்தைச் சோ்ந்த அருட்தந்தை பிலோமின்ராஜ் முன்னிலையில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

குழந்தை இயேசு பிறப்பை எடுத்துக்கூறும் வகையில், குடிலில் குழந்தை இயேசு வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சிறப்பு பிராா்த்தனையில் கிறிஸ்தவா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா். அவா்கள் தங்களுக்குள் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனா்.

இதேபோன்று, விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் உள்ள தூய ஜேம்ஸ் தேவாலயம், டிஇஎல்சி தேவாலயம், புனித சவேரியா் தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

மேலும், திண்டிவனம், செஞ்சி, விக்கிரவாண்டி, காணை, கல்பட்டு, ஆயந்தூா், வளவனூா், கண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள தேவாலயங்களில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிராா்த்தனைகளிலும் கிறிஸ்தவா்கள் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.