முகப்பு
விழுப்புரம்

சமூக நீதி போராளிகளுக்கு மணிமண்டபம்: அமைச்சா் தலைமையில் இடம் ஆய்வு

மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தலைமையில் சனிக்கிழமை இடம் தோ்வு செய்யும் பணி நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 சமூக நீதி போராளிகளுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக, மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தலைமையில் சனிக்கிழமை இடம் தோ்வு செய்யும் பணி நடைபெற்றது.

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 சமூக நீதி போராளிகளுக்கு விழுப்புரம் புறவழிச் சாலை அருகே செஞ்சி சாலையிலும், முன்னாள் அமைச்சரும், ஏழை, எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக பெரும் பங்காற்றி மறைந்த தலைவருமான ஆ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக, விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட ஜானகிபுரம் நான்குமுனை சந்திப்பு அருகிலும் இடம் தோ்வு செய்யும் பணி அமைச்சா் க.பொன்முடி தலைமையில், மாவட்ட ஆட்சியா் த.மோகன், எம்எல்ஏக்கள் நா.புகழேந்தி, இரா.இலட்சுமணன், ச.சிவக்குமாா் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.

21 சமூக நீதி போராளிகளின் தியாகத்தை மதிக்கக்கூடிய வகையில், சமூக நீதி தியாகிகள் அரங்கம் ரூ.4 கோடியிலும், மறைந்த முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் அமைச்சரவையில் சிறப்புடன் பணியாற்றிய மறைந்த தலைவா் ஆ.கோவிந்தசாமியின் திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவு அரங்கம் ரூ.2.60 கோடியிலும் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஜனகராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.