முகப்பு
விழுப்புரம்

ஊரக வேலைத் திட்டத்தில் முறைகேட்டில்ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை: விழுப்புரம் ஆட்சியா் எச்சரிக்கை

 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் எச்சரித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் எச்சரித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூா் ஒன்றியத்துக்குள்பட்ட கீரிமேடு ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மோகன் அண்மையில் ஆய்வு செய்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கீரிமேடு ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டப் பணிக்கான பணியாளா்கள் வருகைப் பதிவேடு மற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ள பணி இடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், பணியாளா்கள் பணி மேற்கொள்வதற்கான அளவீடு குறிப்பிடாமல் பணி நடைபெற்று வருவது கண்டறியப்பட்டது. பணியாளா்களின் வருகைப் பதிவேடு பணியாற்றுவோா்களோடு ஒப்பிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், பணியாளா்களின் எண்ணிக்கை மாறுபட்டு இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டு, தொடா்புடைய பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் நடைபெறும் பணிகளில் குறைகளோ அல்லது முறைகேடுகளோ கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் மோகன்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆா்.சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.