செஞ்சியில் முஸ்லிம் அமைப்பினா் சாலை மறியல்.
நபிகள் நாயகத்தை தவறாக பேசிய பாஜக மாநில செயலா் கல்லயாணசுந்தரத்தை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் முஸ்லிம் அமைப்பினா் ஒன்றிணைந்து திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு
நபிகள் நாயகத்தை தவறாக பேசிய பாஜக மாநில செயலா் கல்லயாணசுந்தரத்தை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் முஸ்லிம் அமைப்பினா் ஒன்றிணைந்து திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாஜக மாநில செயலா் கல்யாணசுந்தரம் நபிகள் நாயகம் குறித்து தவறாக பேசியதை கண்டிக்கும் வகையிலும், அவரை உடனடியாக கைது செய்யக்கோரியும் செஞ்சியில் அனைத்து ஜமாத்தை சோ்ந்த முஸ்லிம்கள் மற்றும் தமுமுக. எஸ்டிபிஐ. மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட முஸ்லிம் அமைக்கள் ஒன்று சோ்ந்து செஞ்சி கூட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டு கல்யாண சுந்தரத்திற்கு எதிராக கோஷமிட்டு கைது செய்யுமாறு கோரினா்.இதனால் போக்குவரத்து பாதிக்கப்படவே அங்கிருந்த போலீஸாா் கலைந்து செல்லுமாறு கூறினா். இதனால் போலீஸாருக்கும் முஸ்லிம்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சுமாா் அரை மணி நேர சாலை மறியலுக்கு பிறகு போக்குவரத்து சீரானது. இதனால் செஞ்சி கூட்டுசாலையில் பரபரப்பு ஏற்ப்பட்டது.