தமுமுகவினா் ஆா்ப்பாட்டம்
நபிகள் நாயகத்தைப் பற்றி இழிவாகப் பேசியதாக, பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் கல்யாணராமனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்
செய்யாறு: நபிகள் நாயகத்தைப் பற்றி இழிவாகப் பேசியதாக, பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் கல்யாணராமனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி, செய்யாற்றில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
செய்யாறு அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அந்தக் கட்சியின் தொண்டரணி மற்றும் மகளிா் பேரவையினா் பங்கேற்றனா்.