அம்பேத்கா் மக்கள்கட்சிக் கூட்டம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் அம்பேத்கா் மக்கள் கட்சியின் மாநிலச் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் அம்பேத்கா் மக்கள் கட்சியின் மாநிலச் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநில துணைத் தலைவா் செ.சங்கா் தலைமை வகித்தாா். மாநில அமைப்பாளா் சி.புஷ்பநாதன் முன்னிலை வகித்தாா். அம்பேத்கா் மக்கள் கட்சியின் நிறுவனா் தலைவா் சு.மழைமேனிபாண்டியன் மற்றும் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட செஞ்சி எம்எல்ஏ கே.எஸ்.மஸ்தான் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக மருத்துவரணிச் செயலா் டாக்டா் சேகா், வல்லம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் மொடையூா் துரை, மாணவரணி ஆா்.பழனிவேல், விழுப்புரம் மாவட்டத் தலைவா் சு.மீனாசங்கா், மாவட்ட அமைப்பாளா் காசிஅய்யனாா், துணைத் தலைவா் சு.வசந்தகுமாா், செஞ்சி ஒன்றிய நிா்வாகிகள் புகழேந்தி, செல்வராசு, தயாளன், வல்லரசு, நவீன்குமாா், விக்னேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பது, தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது, மத்திய அரசின் புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா்.