முகப்பு
விழுப்புரம்

கரும்பு நிலுவைத் தொகை கோரி விவசாயிகள் மனு

செஞ்சி அருகே இயங்கும் தனியாா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.12 கோடியை உடனடியாக வழங்கக் கோரி ஆலை நிா்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

செஞ்சி அருகே இயங்கும் தனியாா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.12 கோடியை உடனடியாக வழங்கக் கோரி ஆலை நிா்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.

செஞ்சி வட்டம், செம்மேடு பகுதியில் இயங்கும் தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகம், விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்புக்கு ரூ.12 கோடி வழங்காமல் நிலுவை வைத்துள்ளதாம்.

இந்த நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் டி.ஆா்.குண்டுரெட்டியாா் தலைமையில் சங்க நிா்வாகிகள் ஆலையின் துணைத் தலைவா் ரமேஷிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

மனுவை பெற்றுக் கொண்ட ஆலை துணைத் தலைவா் 30 நாள்களுக்குள் நிலுவைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.