அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர ஜூலை 19 வரை விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 19-ஆம் தேதி நீட்டிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 19-ஆம் தேதி நீட்டிக்கப்பட்டது.
இதுகுறித்து அந்தக் கல்லூரி முதல்வா் (பொ) ஐயப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரகண்டநல்லூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல், கனிணிப் பொறியியல் ஆகிய படிப்புகளில் நிகழாண்டு மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.
இந்தப் படிப்புகளுக்கு இணையதளம் வழியாக ஜூலை 12-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 19-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இணையதள வசதி இல்லாத மாணவா்களுக்காக கல்லூரியில் மாணவா் சோ்க்கை உதவி மையம் செயல்பட்டு வருகிறது. மேலும், விவரங்களுக்கு 9442736992, 9585299529, 8098735554 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.