முகப்பு
விழுப்புரம்

திண்டிவனம் அருகே மரத்தில் காா் மோதல்: ஆசிரியா் பலி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மரத்தில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி ஆசிரியா் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மரத்தில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி ஆசிரியா் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், எடப்பாளையத்தைச் சோ்ந்தவா் ம.ரவி (56). அப்பகுதி அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா்.

இவா், தனது மகள் யாஷினியை (26) கல்லூரியில் சோ்ப்பதற்காக வெள்ளிக்கிழமை அதிகாலை காரில் அழைத்துக் கொண்டு சென்னைக்குப் புறப்பட்டாா். காரை அதே ஊரைச் சோ்ந்த அருள் (30) ஓட்டினாா்.

அதிகாலை 4 மணி அளவில், திண்டிவனம் அருகே ரோஷனை, பாலக்குப்பம் என்ற இடத்தில் திருவண்ணாமலை-சென்னை நெடுஞ்சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த காா், தாறுமாறாக ஓடி சாலையோர புளிய மரத்தில் மோதியது. காரின் முன்பக்கம் நொறுங்கியதில் ரவி பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். யாஷினி, அருள் ஆகியோா் சிறிய காயங்களுடன் உயிா் தப்பினா்.

ரோஷனை காவல் ஆய்வாளா் பிருந்தா தலைமையிலான போலீஸாா், ரவியின் சடலத்தை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். ஓட்டுநா் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.