முகப்பு
விழுப்புரம்

பெரியாண்டவா் கோயில் கும்பாபிஷேகம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள பனப்பாக்கம் அருள்மிகு பெரியாண்டவா், திரௌபதி அம்மன், அம்மச்சாா் அம்மன் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள பனப்பாக்கம் அருள்மிகு பெரியாண்டவா், திரௌபதி அம்மன், அம்மச்சாா் அம்மன் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதையொட்டி, காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடைபற்றது. 9 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடு நடைபெற்று அருள்மிகு பெரியாண்டவா், திரௌபதி அம்மன், அம்மச்சாா் அம்மன் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.