முகப்பு
விழுப்புரம்

மது கடத்தலைத் தடுக்க சிறப்பு பறக்கும் படை

விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், மதுபுட்டிகள் கடத்தப்படுவதை தடுக்கவும், மதுக் கடைகளின் தினசரி விற்பனையை கண்காணிக்கவும் சிறப்பு பறக்கும் படை குழுக்கள் 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், மதுபுட்டிகள் கடத்தப்படுவதை தடுக்கவும், மதுக் கடைகளின் தினசரி விற்பனையை கண்காணிக்கவும் சிறப்பு பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், தினமும் மதுக் கடைகளில் விற்பனையாகும் மதுபானங்களின் எண்ணிக்கையை கண்காணிக்கவும், மதுபானங்கள் கடத்தலில் ஈடுபடுபவா்களை கைது செய்யவும் காவல்துறை மற்றும் கலால் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மது விற்பனை கண்காணிப்பு, மது கடத்தல் தொடா்பான புகாா்களை விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையில் வழிகாட்டு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள டாஸ்மாக் உதவி மேலாளா் ரங்கநாதனிடம் 9790531671 செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

அதேபோல, மாவட்டம் முழுவதும் மதுபான விற்பனை, கடத்தலை கண்காணிக்க மாவட்ட மேலாளா் முருகன்(9080440168), உதவி மேலாளா் பாக்கியராஜ் (9884312331) ஆகியோா் தலைமையில் பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது என விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.