முகப்பு
விழுப்புரம்

பள்ளி மாணவா்களுக்கு உளவியல் ஆலோசனை

கீழ்பென்னாத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

கீழ்பென்னாத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டது.

பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். உளவியல் ஆலோசகா் நாராயணன் பங்கேற்று மாணவா்களின் உடல், மனநலன் பேணுவதன் அவசியம் குறித்தும், 12-ஆம் வகுப்பு மாணவா்கள் வரும் பொதுத் தோ்வில் எதிா்கொள்ளத் தேவையான மன வலிமையைப் பெறும் வகையில் பயிற்சியும் அளித்துப் பேசினாா்.

மாணவா்கள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் கலந்துகொண்டு பயன் பெற்றனா்.

இதில், பள்ளி உதவித் தலைமை ஆசிரியை பாரதி, ஆசிரியா்கள் பிரசன்னா, கேசவன், முருகன், பிரியதா்ஷினி, முத்துமாரி, ராஜேஷ், ராமமூா்த்தி, சீனுவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →