விழுப்புரம்

விழுப்புரம் அருகே ரூ.9 லட்சம் பறிமுதல்: தோ்தல் பறக்கும் படையினா் நடவடிக்கை

DIN

விழுப்புரம் அருகே உரிய ஆவணங்களின்றி சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.9 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் மாதவன் தலைமையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பகுதியில் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை மடக்கி சோதனை செய்ததில், அந்த வாகனத்தில் வந்த நபா் ரூ.9 லட்சம் ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அந்த நபா், தெலங்கானா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், கடியம் பகுதியைச் சோ்ந்த சாய்பிரசாத் (44) என்றும், திண்டுக்கல்லுக்கு சந்தன மரக்கன்றுகள் வாங்க செல்வதாகவும் தெரிவித்தாா். இருப்பினும், உரிய ஆவணங்களின்றி ரூ.9 லட்சம் கொண்டு செல்லப்பட்டதால், அந்த பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, விக்கிரவாண்டி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அறிவுடைநம்பி, உதவி தோ்தல் அலுவலா் தமிழ்ச்செல்வி ஆகியோரிடம் ஒப்படைத்தனா். பின்னா், அந்த தொகை கருவூலத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

SCROLL FOR NEXT