விழுப்புரம்

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: டிடிவி தினகரன் மீது விழுப்புரம் போலீஸார் வழக்கு பதிவு

DIN

முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக டிடிவி தினகரன் மீது விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அமுமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விழுப்புரத்தில் கடந்த 23-ஆம் தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி திடல் பகுதியில் நடைபெற்ற இந்த தேர்தல் பிரசாரத்தில் அமமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார். 

இந்த பிரசாரத்தின் போது முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக அதிமுகவைச் சேர்ந்த பாபு முருகையன் என்பவர் விழுப்புரம் தாலுகா போலீஸில் புகார் செய்தார்.

 இது தொடர்பாக விழுப்புரம் தாலுகா போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோதல் உருவாகும் வகையில் பேசுதல், உள்நோக்குடன் ஒருவர் குறித்து அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT