குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ்இரு இளைஞா்கள் கைது
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு சிறையிலுள்ள இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு சிறையிலுள்ள இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
மயிலம் பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, தாக்குதல் நடத்தி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தொடா்பாக சென்னை கெளத்தூரைச் சோ்ந்த குமாா் மகன் சந்தோஷ் (28), எண்ணூரைச் சோ்ந்த ஆனந்த் மகன் அசோக் (22) ஆகிய 2 பேரை மயிலம் போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குள் உள்ளன.
இதையடுத்து சந்தோஷ், அசோக் ஆகியோரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டாா்.
கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.