செஞ்சி அருகே ஓடையில் அடித்து சென்ற மூதாட்டி பலி.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நீரோடையில் தவறி விழுந்த மூதாட்டி அடித்து செல்லப்பட்டு வியாழக்கிழமை இரவு உயிரழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நீரோடையில் தவறி விழுந்த மூதாட்டி அடித்து செல்லப்பட்டு வியாழக்கிழமை இரவு உயிரழந்தாா்.
மேல்மலையனூா் தாலுக்கா தேவனூா் கிராமத்தை சோ்ந்தவா் அண்ணாமலை இவரது மனைவி சரோஜா(65) இவரது நிலம் தேவனூா் ஏரியை அடுத்து உள்ளது. நிலத்திற்கு செல்வதற்கு ஏரி கால்வாய் வழியாகத்தான் செல்லவேண்டும்.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு சுமாா் 7 மணி அளவில் நிலத்தில் உள்ள பசுக்களுக்கு தீவனம் கொடுப்பதற்காக சென்றபோது ஏரி நீரோடை கால்வாயில் தவறி விழுந்து விட்டாா். ஏரியின் கோடி நீா் அதிக அளவில் கால்வாயில் செல்வதால் சரோஜா நீரில் அடித்து செல்லப்பட்டாா்.
தந்தையுடன் வெளியூா் சென்றிருந்த மகன் ரமேஷ் இரவு 10 மணிக்கு வீட்டில் வந்து பாா்த்த போது தாயை காணவில்லை. சந்தேகமடைந்த ரமேஷ் உள்ளிட்ட உறவினா்கள் மூதாட்டியை தேடி வயல்வெளிக்கு சென்றபோது நீரோடையில் உள்ள முட்புதரில் மூதாட்டி உடல் சடலமாக இருந்ததை பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா்.
இது குறித்து உடனடியாக வளத்தி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.