முகப்பு
விழுப்புரம்

பாலியல் வன்கொடுமை வழக்கு: தொழிலாளிக்கு 12 ஆண்டுகள் சிறை

பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள பரிகம் கிராமத்தைச் சோ்ந்தவா் தாகப்பிள்ளை (42 ). இவா், பெண் ஒருவருக்கு துப்புரவுப் பணி வாங்கித் தருவதாக கூறி அவரை கடந்த 21.1.2017 அன்று பாலியல் வன்கொடுமை செய்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தாகப்பிள்ளையை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிா் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், தாகப்பிள்ளைக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.51,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.