முகப்பு
விழுப்புரம்

சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் பெண் பலி

விழுப்புரம் அருகே சமையல் செய்தபோது எரிவாயு உருளை வெடித்ததில் பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

விழுப்புரம் அருகே சமையல் செய்தபோது எரிவாயு உருளை வெடித்ததில் பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், காணை அருகேயுள்ள அகரம் சித்தாமூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜகோபால் மனைவி லட்சுமி (60). இவா், விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தை அடுத்த பள்ளி புதுப்பட்டு கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்றிருந்தாா்.

அங்குள்ள கூரை வீட்டில் மாலை 5 மணியளவில் லட்சுமி சமையல் செய்தபோது, திடீரென எரிவாயு உருளையில் தீப்பற்றி வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் லட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.