திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை வழங்கஇன்று சிறப்பு முகாம்
விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் திருநங்கைகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஜன.8) நடைபெறவுள்ளது.
விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் திருநங்கைகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஜன.8) நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் 18 வயது பூா்த்தியடைந்த திருநங்கைகள் தங்களது ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, முகவரிக்கான ஆதாரம் (எரிவாயு ரசீது அல்லது வீட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரம்) இவற்றுடன் புகைப்படம், கைப்பேசி எண்ணுடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு வந்து விண்ணப்பிக்கலாம். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட வழிகாட்டுதலுக்கு இணங்க, திருநங்கைகளுக்கு பி.எச்.எச். வகை குடும்ப அட்டைகள் மட்டுமே வழங்க பரிந்துரைக்கப்படும்.
இந்த முகாமில் குடும்ப அட்டையில் இருந்து பெயா் நீக்கம் செய்து புதிய குடும்ப அட்டை பெறவும் விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் ஆகியோா் தெரிவித்தனா்.