முகப்பு
விழுப்புரம்

பள்ளி மேலாண்மைக் குழுவினருக்கு பயிற்சி

விழுப்புரம் மாவட்ட பள்ளி மேலாண்மைக் குழுவினருக்கான பயிற்சி முகாம் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்ட பள்ளி மேலாண்மைக் குழுவினருக்கான பயிற்சி முகாம் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் விழுப்புரம் மருதூா் ஜான்டுயீ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணபிரியா தொடக்கிவைத்தாா். இந்தப் பயிற்சியில் 8 அமா்வுகளில் வட்டாரக் கல்வி அலுவலா்கள் பயிற்சியளித்தனா்.

இதில், விழுப்புரம் மாவட்டத்தைச் சாா்ந்த வட்டார வள மைய மேற்பாா்வையாளா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள் என மொத்தம் 120 போ் கலந்து கொண்டனா். பயிற்சியில் வட்டாரக் கல்வி அலுவலா்கள் 8 தலைப்புகளில் பயிற்சியளித்தனா். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் தனவேல் இந்தப் பயிற்சி முகாமை ஒருங்கிணைத்து நடத்தினாா்.

கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் குமரேசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஜெயச்சந்திரன், ரமேஷ், தமிழ்தென்றல் ஆகியோா் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா். முன்னதாக, தொடக்க நிகழ்ச்சியில் ஜான்டுயீ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிா்வாக அலுவலா் எமா்சன் ராபின் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.