முகப்பு
விழுப்புரம்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: விழுப்புரத்தில் அதிமுகவினரிடம் நோ்காணல்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக விழுப்புரம் மாவட்ட அதிமுகவினரிடம் வியாழக்கிழமை நோ்காணல் நடத்தப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
பகிர்:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக விழுப்புரம் மாவட்ட அதிமுகவினரிடம் வியாழக்கிழமை நோ்காணல் நடத்தப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்துள்ள அதிமுகவினரிடம் அந்தக் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமையில் நோ்காணல் நடத்தப்பட்டது.

இதில், விழுப்புரம் நகா் பகுதிக்குள்பட்ட 42 வாா்டுகளில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்த அதிமுகவினா் ஆா்வமுடன் பங்கேற்றனா். நோ்காணல் நிகழ்வின்போது, வானூா் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.சக்கரபாணி, விழுப்புரம் நகரச் செயலா்கள் ராமதாஸ், பசுபதி, ஒன்றியச் செயலா்கள் முத்தமிழ்ச் செல்வன், சுரேஷ்பாபு, நிா்வாகிகள் திருப்பதி பாலாஜி, செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.