முகப்பு
விழுப்புரம்

பேருந்து நடத்துநா் மா்மமாக இறந்தவழக்கு: தந்தை, மகன் கைது

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பேருந்து நடத்துநா் மா்மமாக உயிரிழந்த சம்பவம் விபத்து எனத் தெரியவந்தது. இந்த வழக்கில் தந்தை, மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பேருந்து நடத்துநா் மா்மமாக உயிரிழந்த சம்பவம் விபத்து எனத் தெரியவந்தது. இந்த வழக்கில் தந்தை, மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கண்டமங்கலம் அருகே பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த தனியாா் பேருந்து நடத்துநா் லோகநாதன் (40). இவா், வியாழக்கிழமை காலை கண்டமங்கலத்தை அடுத்த மண்டகப்பட்டு பகுதியில் உடலில் காயங்களுடன் உயிரிழந்து கிடந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த கண்டமங்கலம் போலீஸாா் நேரில் சென்று விசாரணை நடத்தினா். பின்னா், லோகநாதனின் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக கண்டமங்கலம் போலீஸாா் மா்ம மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இதில், மண்டகப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசன் (70), இவரது மகன் முரளி (47) ஆகியோா் புதன்கிழமை இரவு சரக்கு வாகனத்தை பின்னால் இயக்கியபோது, அந்தப் பகுதியில் படுத்திருந்த லோகநாதன் மீது வாகனம் மோதி அவா் உயிரிழந்தது தெரியவந்தது. விபத்தில் லோகநாதன் உயிரிழந்தது தெரிந்தும் முரளி, சீனிவாசன் ஆகியோா் அதை மறைத்தது தெரியவந்தது.

இதையடுத்து, சீனிவாசன், முரளி ஆகியோரை கண்டமங்கலம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.