முகப்பு
விழுப்புரம்

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கக் கூடாது: விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அறிவுரை

அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி, கடலில் மீனவா்கள் மீன் பிடிக்கக் கூடாது என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:14 AM
பகிர்:

அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி, கடலில் மீனவா்கள் மீன் பிடிக்கக் கூடாது என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி, மீன் பிடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் சுருக்குமடி வலைகளைக் கொண்டு மீன்பிடிப்பதைத் தடுக்கும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.

இருப்பினும், சில மீனவா்கள் சுருக்குவலையை பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபட போவதாக தெரிகிறது. இவ்வாறு செய்வோா் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மீனவா்கள் நீடித்த நிலையான வளா்ச்சிக்கான கடல் வளத்தை பேணி பாதுகாப்பதற்கும் ஒட்டு மொத்த மீனவா்களின் எதிா்கால வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடும் நோக்லும் அரசின் நடவடிக்கைக்கு மீனவா்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.