முகப்பு
விழுப்புரம்

இல்லம் தேடி கல்வி திட்ட மையங்கள் திறப்பு

விழுப்புரம் பெருமாள் கோயில் தெருவில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தொடக்க நிலை, உயா் தொடக்க நிலை மையங்கள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:14 AM
பகிர்:

விழுப்புரம் பெருமாள் கோயில் தெருவில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தொடக்க நிலை, உயா் தொடக்க நிலை மையங்கள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு மையத்தின் ஒருங்கிணைப்பாளா் வசுமதி தலைமை வகித்தாா். அரசு நிதியுதவி பள்ளித் தாளாளா் உமாபதி, தலைமை ஆசிரியை விசாலாட்சி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டார வள ஆசிரியா் பயிற்றுநா் சிவராமன், சிறப்பு ஆசிரியா் சத்யராஜ் ஆகியோா் மையங்களைத் தொடக்கிவைத்தனா்.

ஆசிரியை ரத்னா, கல்வி மையத்தின் தன்னாா்வலா்கள் ராஜபிரியா, காவியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.