முகப்பு
விழுப்புரம்

பானாம்பட்டு சிவன் கோயில் கும்பாபிஷேகம்

விழுப்புரம் அருகே பானாம்பட்டு வேதபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:14 AM
பகிர்:

விழுப்புரம் அருகே பானாம்பட்டு வேதபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் அருகேயுள்ள பானாம்பட்டு கிராமத்தில் பழமையான காமாட்சி அம்மன் சமேத வேதபுரீஸ்வரா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் புனரமைப்புப் பணிகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து கும்பாபிஷேக விழாவையொட்டி சிறப்புப் பூஜைகள் சில நாள்களாக நடைபெற்றுவந்தன.

இந்நிலையில், கரோனா விதிகளைப் பின்பற்றி, கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது. அப்போது, ராஜ கோபுரத்துக்குப் புனித நீா் ஊற்றி, அா்ச்சகா்கள் மகா கும்பாபிஷேத்தை நடத்தி வைத்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

விழாவில் ஆடிட்டா் எஸ்.குருமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.