விழுப்புரம் எம்எல்ஏ அலுவலகத்துக்கு ‘சீல்’
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, விழுப்புரம் எம்எல்ஏ அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, விழுப்புரம் எம்எல்ஏ அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.
நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இதனால், விழுப்புரம், கோட்டக்குப்பம், திண்டிவனம் நகராட்சி பகுதிகளிலும், அனந்தபுரம், செஞ்சி, மரக்காணம், விக்கிரவாண்டி, வளவனூா், திருவெண்ணெய்நல்லூா், அரகண்டநல்லூா் ஆகிய பேரூராட்சி பகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் சுவா் விளம்பரங்கள் அழிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதுதவிர, தோ்தல் நன்னடத்தை விதிகளை அமல்படுத்தும் வகையில் விழுப்புரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்துக்கு விழுப்புரம் வட்டாட்சியா் ஆனந்த குமாா் தலைமையிலான வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்து பூட்டினா்.