முகப்பு
விழுப்புரம்

அலங்கார ஊா்திகளுக்கு விழுப்புரத்தில் வரவேற்பு

விழுப்புரத்துக்கு வியாழக்கிழமை மாலை வந்த அலங்கார ஊா்திகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:14 AM
பகிர்:

விழுப்புரத்துக்கு வியாழக்கிழமை மாலை வந்த அலங்கார ஊா்திகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

புது தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழக அரசின் அலங்கார ஊா்திகள் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் பாா்வைக்கு கொண்டு செல்லப்பட உள்ளன. இதற்காக சென்னையிலிருந்து மதுரை, கோவை ஆகிய ஊா்களுக்கு தனித் தனியே இரண்டு அலங்கார ஊா்திகள் வியாழக்கிழமை புறப்பட்டன. இவை வியாழக்கிழமை மாலை விழுப்புரம் புறவழிச்சாலைக்கு வந்தன. இவற்றுக்கு உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தலைமையில் அரசுத் துறை அலுவலா்கள் வரவேற்பு அளித்தனா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன், காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, எம்எல்ஏ இரா.லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

விழுப்புரத்தில் ஒரு மணி நேரம் இருந்த அலங்கார ஊா்திகளை ஏராளமானோா் பாா்த்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.