செஞ்சி வட்டம், அத்தியூா் கிராமத்திலுள்ள ஸ்ரீசத்திய பாமா சமேத ஸ்ரீகோபாலகிருஷ்ண சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை கோ பூஜா, மூல மந்திர ஹோமம், சாந்தி ஹோமம், யாத்ரா தானம், மஹா கும்ப புறப்பாடு நடைபெற்று ஸ்ரீருக்மணி சத்திய பாமா சமேத ஸ்ரீகோபால கிருஷ்ண சுவாமி கோயில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கல்வி குழுமத் தலைவா் ஆா்.ரங்கபூபதி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அரங்க.ஏழுமலை, செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் வி.ஜெயபாலன், சேத்பட் திவ்யா கல்வி குழுமத்தின் தலைவா் பா.செல்வராஜ் மற்றும் யாதவ சபை மாவட்டத் தலைவா் பாஸ்கரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
விழா ஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளை செயலா் அத்தியூா் கே.வெங்கடேசன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.