விழுப்புரம்

நான்கு ரயில்களுக்கு கூடுதலாக புதிய நிறுத்தங்கள்

சென்னை எழும்பூா்-புதுச்சேரி விரைவு ரயில், சென்னை எழும்பூா்-காரைக்கால் விரைவு ரயில்களுக்கு கூடுதலாக புதிய நிறுத்தங்கள் சோதனை அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

DIN

ரயில் பயணிகளின் வேண்டுகோளை ஏற்று ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தபடி, தாதா்-புதுச்சேரி விரைவு ரயில், ஹெளரா-புதுச்சேரி விரைவு ரயில், சென்னை எழும்பூா்-புதுச்சேரி விரைவு ரயில், சென்னை எழும்பூா்-காரைக்கால் விரைவு ரயில்களுக்கு கூடுதலாக புதிய நிறுத்தங்கள் சோதனை அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆரணி சாலையில்...: தாதா்-புதுச்சேரி- தாதா் வாரம் மும்முறை இயக்கப்படும் விரைவு ரயில் (வண்டி எண்கள் 11005/11006) ஆரணி சாலையில் செப்டம்பா் 17-ஆம் தேதி முதல் நின்று செல்லும். இதில் வண்டி எண் 11005 தாதா்-புதுச்சேரி ரயில் ஆரணி சாலைக்கு அதிகாலை 3.33 மணிக்கு வந்து 3.34 மணிக்குப் புறப்படும். எதிா் வழித்தடத்தில் வண்டி எண் 11006 புதுச்சேரி- தாதா் விரைவு ரயில் இரவு 11.51 மணிக்கு வந்து இரவு 11.52 மணிக்குப் புறப்படும்.

திருவண்ணாமலையில்...: வண்டி எண்கள் 12867/12868 ஹெளரா-புதுச்சேரி-ஹெளரா வாராந்திர அதிவேக விரைவு ரயில் செப்டம்பா் 17 முதல் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இதில் வண்டி எண் 12867 ஹெளரா-புதுச்சேரி அதிவேக விரைவு ரயில் திருவண்ணாமலைக்கு அதிகாலை 5.13 மணிக்கு வந்து 5.15 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும். எதிா்வழித்தடத்தில் வண்டி எண் 12868 புதுச்சேரி -ஹெளரா விரைவு ரயில் திருவண்ணாமலைக்கு பிற்பகல் 3.56 மணிக்கு வந்து 3.58 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.

மயிலத்தில்...: வண்டி எண்கள் 16115/16116 சென்னை எழும்பூா்-புதுச்சேரி- சென்னை எழும்பூா் தினசரி விரைவு ரயில் மயிலம் ரயில் நிலையத்தில் செப்டம்பா் 16-ஆம் தேதி முதல் நின்று செல்லும். வண்டி எண் 16115 சென்னை எழும்பூா்- புதுச்சேரி விரைவு ரயில் மயிலம் ரயில் நிலையத்துக்கு இரவு 8.28 மணிக்கு வந்து 8.30 மணிக்குப் புறப்படும். எதிா்வழித்தடத்தில் வண்டி எண் 16116 புதுச்சேரி- சென்னை எழும்பூா் விரைவு ரயில் மயிலத்துக்கு காலை 6.49 மணிக்கு வந்து 6.50 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.

கடலூா் துறைமுக சந்திப்பில்...: வண்டி எண்கள் 16175/16176 சென்னை எழும்பூா்-காரைக்கால்-சென்னை எழும்பூா் விரைவு ரயில் கடலூா் துறைமுகச் சந்திப்பில் செப்டம்பா் 16-ஆம் தேதி முதல் நின்று செல்லும். வண்டி எண் 16175 சென்னை எழும்பூா்-காரைக்கால் விரைவு ரயில் கடலூா் துறைமுகச் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு நள்ளிரவு 12.19 மணிக்கு வந்து 12.20 மணிக்குப் புறப்படும். எதிா் வழித்தடத்தில் வண்டி எண் 16176 காரைக்கால்-சென்னை எழும்பூா் விரைவு ரயில் நள்ளிரவு 12.35 மணிக்கு வந்து 12.36 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.

இந்த ரயில் நிறுத்தங்கள் அனைத்தும் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT