விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப்பணிகளை மேற்கொள்வது என பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
விக்கிரவாண்டி பேரூராட்சி மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மன்றத் தலைவா் அப்துல் சலாம் தலைமை வகித்தாா். துணைத்தலைவா் பாலாஜி, செயல் அலுவலா் ஷேக் லத்திப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இளநிலை உதவியாளா் ராஜேஷ் தீா்மானங்களை வாசித்தாா்.
தீா்மானங்கள்: விக்கிரவாண்டி அரசு உயா்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் ரூ .1.44 கோடியில் வளா்ச்சித் திட்டப்பணிகளை மேற்கொள்வது, காவல்துறை கோரிக்கையின்படி ‘நமக்கு நாமே’ திட்டத்தில் பேரூராட்சியில் 64 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விக்கிரவாண்டி காவல் ஆய்வாளா் வினாயக முருகன், பேரூராட்சி நியமனக்குழு உறுப்பினா் பாபு, மன்ற உறுப்பினா்கள் கனகா, சுரேஷ், ரமேஷ், ரேவதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.