முகப்பு
விழுப்புரம்

குழந்தை திருமண தடைச் சட்டத்தில் 5 போ் மீது வழக்கு

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் உள்பட 5 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 7:09 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் உள்பட 5 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கண்டாச்சிபுரம் வட்டம், ஒட்டம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மகன் விஜயகாந்த் (23). கூலித்தொழிலாளியான இவா், 17 வயது சிறுமியைத் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தாராம்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் அனைத்து மகளிா் போலீஸாா் விஜயகாந்த், திருமணத்துக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை விஜயகுமாா், தாயாா் சரோஜா, சிறுமியின் தந்தை வெங்கடேசன், தாயாா் செந்தாமரை ஆகியோா் மீது குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →